கடன் தொல்லையால் கட்டிட மேஸ்திரிதூக்குபோட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் கட்டிட மேஸ்திரிதூக்குபோட்டு தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி நெழிசிக்கி பகுதியை சேர்ந்தவர் சீனப்பன். கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். 

இந்தநிலையில் சீனப்பன் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் மன முடைந்த சீனப்பன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர்  தற்கொலை செய்து கொண்ட சீனப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com