இந்தோனேசியாவில் மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் பலி
இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். #IndonesiaChurchAttack
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.