சோமாலியா: போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் - 13 பேர் பலி

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரில் உள்ள போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.
சோமாலியா: போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் - 13 பேர் பலி
Published on

மொகாடிசு:

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரில் உள்ள போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் போலீஸ் அகாடமி உள்ளது. இந்நிலையில், இன்று உடலில் குண்டுகளை கட்டி எடுத்து வந்த தீவிரவாதிகள் அகாடமியின் உள்ளே நுழைந்து வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவு இயக்கமான அல் சபாப் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com