கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தற்கொலை

ராமநாதபுரம் அருகே கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தற்கொலை
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகேயுள்ள காருகுடியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது42). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பா.ஜனதா கட்சியின், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் காருகுடி தென்னந்தோப்பு பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். அவர், ‘‘நான் பணப்பிரச்சினையால் கடன் வாங்கியிருந்தேன். என்னை அடித்து அவமானப்படுத்தியதால் மன வேதனையடைந்தேன். என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய லாரி உரிமையாளர் பக்ருதீன், கலீல் மற்றும் சிலர் மீது பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com