சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

அரசூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலையில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், நேற்று ஆலையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு அமைப்பாளர் பழனி, சங்க செயலாளர் அய்யனார், துணை தலைவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டமானது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்ந்து 34 ஆண்டுகளாக சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் 90 தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யதிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை வேலையில் சேர்ப்பதை கண்டித்தும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சாரங்கபாணி, சின்னத்தம்பி, குப்புசாமி, அய்யப்பன், ராஜேந்திரன், ஏழுமலை, ஜோதி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com