திருநின்றவூர் அருகே தரைப்பாலத்தில் திடீர் விரிசல்: பஸ் போக்குவரத்து நிறுத்தம்

திருநின்றவூர் அருகே தரைபாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருநின்றவூர் அருகே தரைப்பாலத்தில் திடீர் விரிசல்: பஸ் போக்குவரத்து நிறுத்தம்
Published on

திருநின்றவூர்:

திருநின்றவூரை அடுத்த கொசவம்பாளையம்- புதுச்சத்திரம் இடையே தரைப்பாலம் உள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த பாலம் சேதம் அடைந்தது.

இதையடுத்து பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று போக்குவரத்து நடந்து வந்தது. அதன் அருகே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான ஆய்வுப் பணியில் நேற்று மாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பாலம் அருகே உள்ள மண்ணின் தரம் குறித்து பரிசோதனை செய்தனர்.

அப்போது தரைப்பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவ்வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறிய வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்து உள்ளனர்.

இதனால் பஸ்கள் அனைத்தும் புதுச்சத்திரம் வரை இயக்கப்படுகிறது. பஸ் போக்குவரத்து முடங்கியதால் வேப்பம்பட்டு, கொட்டாமேடு, கொரட்டூர், கொசவம்பாளையம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விரிசல் ஏற்பட்ட பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பஸ் போக்குவரத்து தொடங்க 2 நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com