காட்பாடி அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் - மைசூர் எக்ஸ்பிரஸ் தப்பியது

காட்பாடி அருகே உள்ள திருவலம் ரெயில் நிலையம் அருகில் வந்த போது தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை என்ஜீன் டிரைவர் கவனித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி
Published on

வேலூர்:

சென்னையில் இருந்து இன்று காலை பெங்களூரு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது.

காட்பாடி அருகே உள்ள திருவலம் ரெயில் நிலையம் அருகில் வந்த போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் அங்கேயே நின்றது. இதனை தொடர்ந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து வேலூருக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயிலில் தவித்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com