சுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

சுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே சிவா நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 66). இவர் கடந்த மாதம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

பின்னர் அவர்கள் நேற்று மாலையில் வீடு திரும்பினர். வீட்டின் உள்ள சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க மோதிரம், கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடைக்கப்பட்ட பீரோ, கதவு ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் 2 கைரேகைகள் சிக்கியது. இந்த கைரேகைகளை கொண்டு பழைய கொள்ளையர்களின் கை ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com