உ.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி

சொந்த தொகுதியில் கூட கட்சியை ஜெயிக்க வைக்க முடியவில்லை என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். #SubramaniamSwamy #YogiAdityanath #Gorakhpurpolls
உ.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி
Published on

புதுடெல்லி:

வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த தொகுதியில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு மந்திரி பதவி கொடுப்பது பற்றி பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், என கூறியுள்ளார். #SubramaniamSwamy #YogiAdityanath #Gorakhpurpolls #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com