

போரூர்:
எம்.ஜி.ஆர். நகர் புகேழந்தி தெருவைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் அதே பகுதி சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பராக திலிபன் என்பவர் அறிமுகமானார். இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிருந்தா-திலிபன் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிருந்தா திலிபனுடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திலிபன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆர்த்தி வேலு, டிரைவர் கோகுல், ஆனந்த் ஆகியோருடன் அழகு நிலையம் சென்று பிருந்தாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென அவர்கள் பிருந்தாவை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டிவிட்டு 1½ பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.
கன்னத்தில் வெட்டுபட்ட பிருந்தா எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திலிபன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஆர்த்திவேலு, கோகுல், ஆனந்த் ஆகிய 4 பேரையும் நேற்று இரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஆர்த்தி வேலு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜின் மகன் ஆவார்.
பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளியான ஆர்த்தி வேலு மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், திருமுல்லைவாயில் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.