ரூ.750 கோடி மோசடி வழக்கு - சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் மனு 12-ந்தேதி விசாரணை

ரூ.750 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் மனு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.750 கோடி மோசடி வழக்கு - சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் மனு 12-ந்தேதி விசாரணை
Published on

சென்னை:

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சுபிக்‌ஷா சுப்பிரமணியம் ரூ.750 கோடி மோசடி வழக்கில் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

பொது மக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று ஏமாற்றியது, வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் சுப்பிரமணியன் மீது சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த சுப்பிரமணியனை கடந்த மாதம் அமலாக்க துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com