லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் சிக்கியது

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை
Published on

வந்தவாசி:

வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுக்கு வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், மைதிலி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு 7 மணியளவில் வந்தவாசி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அதிரடியாக புகுந்தனர்.

அங்கு பணியில் இருந்த முதுநிலை எழுத்தர் (சார்- பதிவாளர் பொறுப்பு) வடிவேல் மற்றும் பத்திர பதிவு செய்வதற்காக காத்திருந்த சிலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பத்திர பதிவு செய்ய காத்திருந்தவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா? என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com