அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 3 லட்சம் குறைந்தது

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்கள்
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. 37 ஆயிரத்து 358 அரசு பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 46 லட்சத்துக்கு 60 ஆயிரத்து 965 மாணவர்கள் இருந்தனர்.

2018-19 கல்வியாண்டில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதனால் 2 லட்சத்து 47 ஆயிரத்து 629 மாணவர் சேர்க்கை குறைந்தது.

8357 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 22 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 22 லட்சத்து 31 ஆயிரத்து 88 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இதில் 67 ஆயிரத்து 929 மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

அதே வேளையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. 2017-18-ம் கல்வியாண்டில் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் படித்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 12 லட்சம் மாணவர் சேர்க்கை அதிகரித்து 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18 கல்வியாண்டில் 80 ஆயிரத்து 217 ஆசிரியர்கள் இருந்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 36 ஆயிரத்து 361 ஆசிரியர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com