போத்தனூர் அருகே மாணவி தற்கொலை

போத்தனூர் அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
போத்தனூர் அருகே மாணவி தற்கொலை
Published on

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள அம்மன் புதூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா (வயது13).இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று வீட்டில் இருந்த திவ்யாவிடம் அவரது தாய் வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறி உள்ளார். ஆனால் திவ்யா வேலை செய்யாமல் இருந்தார். இதனை பார்த்த அவரது தாய் திவ்யாவை கண்டித்தார்.

இதனால் மனவேதனை அடைந்த திவ்யா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திவ்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com