செய்யாறில் மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது

செய்யாறில் மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செய்யாறில் மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது
Published on

செய்யாறு:

செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 17 வயது மாணவி, இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெறாத அந்த மாணவி, மறு தேர்வுக்கு விண்ணப்பித்து தயாரானார்.

செய்யாறு சத்திய மூர்த்தி தெருவில் கணவருடன் வசிக்கும் அக்காள் வீட்டில் தங்கி டியூசன் சென்று படித்தார். அக்காள் வீட்டில் மாணவி நேற்று தனியாக இருந்தார்.

இதை அறிந்த அகதிகள் முகாமை சேர்ந்த பெயிண்டர் தொழிலாளி பீட்டர் மகன் உதயன் (36). வீட்டுக்குள் புகுந்தார். மாணவி மட்டும் தனியாக இருந்ததால் வீட்டின் கதவை அடைத்து வலுகட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டி விட்டு உதயன் தப்பிச் சென்றார்.

வீடு திரும்பிய தனது அக்காளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி மாணவி கதறி அழுதார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிந்து இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் உதயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com