பணகுடி அருகே மாணவியை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பணகுடி அருகே மாணவியை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கு அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28). இவர் படித்து முடித்து விட்டு, வேலை தேடி வந்தார். இவர் பணகுடி பகுதியில் உள்ள 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பின்னால் அடிக்கடி சென்று காதல் வசனம் பேசி உள்ளார்.

மேலும் மாணவியை மயக்கி தனியிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபோல மற்றொரு நாள் ரமேஷ், மாணவியை கையைப்பிடித்து இழுத்து தனி இடத்துக்கு அழைத்து சென்ற போது, மாணவியின் உறவினர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். அப்போது மாணவி, ரமேஷ் ஏற்கனவே தன்னை கற்பழித்த விபரத்தை கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த ரமேஷ் வெளியூருக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com