ஆரணியில் மாணவியை பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது

ஆரணியில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி விட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். ஆரணி டவுன் பிரகாஷ்நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (70) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

மூர்த்தி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். இதனால், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில் மூர்த்தி நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு மது போதையில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்தகாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த சிறுமி வீட்டில் அழுது கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் சிறுமி அழுதுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோர் சிறுமியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com