மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

சேலம்:

சேலம் தேக்கம்பட்டி அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளியின் மகள் கடந்த 2017-ம் ஆண்டு அங்கு உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் அருகே ஏரிக்கரை பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25) அங்கு வந்தார். இவர் மாணவியை தடுத்து நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com