திருவையாறு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- சித்தப்பாவுக்கு போலீசார் வலைவீச்சு

திருவையாறு அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலியல் தொல்லை.
பாலியல் தொல்லை.
Published on

திருவையாறு:

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா கோவில்பத்து அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது 11 வயது மகள் கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சரவணன் மனைவி புவனேஸ்வரி (வயது43). ஆசிரியை. புவனேஸ்வரியின் தங்கை கணவர் கோபிநாத் (40). இவர் பூதலூர் இந்திரா நகரில் வசித்து வருகிறார்.

கடந்த 6.9.19 அன்று சரவணன் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த கோபிநாத் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மாணவி பயத்துடன் இருந்து வந்துள்ளார். பின்னர் மாணவி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணமல்லி வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com