மாணவியை கற்பழித்த பள்ளி ஆசிரியர் கைது

கேரளாவில் 4-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மூணாறு:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில்  உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் பத்மராஜன் (வயது 45). இவர் தன்னிடம் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை வகுப்பறையில் வைத்து கடந்த மாதம் கற்பழித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி மனநிலை பாதிக்கப்பட்டது போல் வகுப்பறையில் இருக்க அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்த போது தன்னை ஆசிரியர் கற்பழித்த விபரத்தை மாணவி கூறியுள்ளார். உடனே பள்ளியின் சார்பாக குழந்தைகள் நல தன்னார்வ குழுக்களிடம் புகார் செய்யப்பட்டது. குழந்தைகள் நல குழு போலீசில் புகார் செய்துள்ளனர். 

பார்தனூர் போலீசார் புகாரின் பேரில் பத்மராஜனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று பத்மராஜனை கைது செய்தனர். இது குறித்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com