திருவாரூர் தியாகராஜர் கோவிலை மண்டியிட்டு வலம் வந்த மாணவர்

திருக்குறளை அனைவரும் கற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திருவாரூர் தியாகராஜர் கோவிலின் வெளி பிரகாரத்தை மாணவர் மண்டியிட்டு வலம் வந்தார்.
மாணவர் குறள் மகன் மண்டியிட்டு கோவிலை வலம் வந்த போது எடுத்த படம்.
மாணவர் குறள் மகன் மண்டியிட்டு கோவிலை வலம் வந்த போது எடுத்த படம்.
Published on

திருவாரூர்:

திருவாரூரைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் குறள் மகன் (வயது 16) பிளஸ்-1 மாணவர். இவர் 4-ம் வகுப்பு படிக்கும் போது 1,330 குறள்களையும் படித்து ஒப்புவித்தார். அவர் அனைவரும் திருக்குறளை கற்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள் செல்வர் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர் குறள்மகன் அனைவரும் திருக்குறளை கற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திருவாரூர் தியாகராஜர் கோவிலை மண்டியிட்டு வெளி பிரகாரத்தை வலம் வந்தார். 2 மணி நேரம் மண்டியிட்டு பிரகாரத்தை வலம் வந்த அவரை பக்தர்கள் உற்சாகப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com