செங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

செங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.
குடிநீர் கேட்டு போராட்டம்.
குடிநீர் கேட்டு போராட்டம்.
Published on

செங்கம்:

செங்கம் அருகே உள்ள இளங்குன்னி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செங்கம்-இளங்குன்னி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வாழங்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.

சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com