மனைவியை குடி போதையில் தாக்கிய தனியார் பஸ் கண்டக்டர் கைது

குடிபோதையில் மனைவியை தாக்கிய தனியார் பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கன்னிவாடி:

திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் மகன் கார்த்திக் (வயது 36). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹெலன் ரோசலின் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ஹெலன் ரோசலின் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குபதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தார். பின்னர் திண்டுக்கல் ஜே.எம்.-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com