சுமித்துக்கு அளித்த தண்டனை கடுமையானது - பிளிஸ்சிஸ் கருத்து

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித்துக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என்று தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். #BallTampering #Smith #FafduPlessis
சுமித்துக்கு அளித்த தண்டனை கடுமையானது - பிளிஸ்சிஸ் கருத்து
Published on

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர்.

தவறை ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது. பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டீவன் சுமித் தடை முடிந்து ஒரு ஆண்டுக்கு அவர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் அறிவித்தது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் தொடங்கியது.

இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் விவகாரம் குறித்து தென்ஆப்பரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

ஸ்டீவன் சுமித்துக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பினேன். எனது உள்ளத்தில் இருந்து தகவலை அனுப்பினேன். அவரை இதுபோன்ற சூழ்நிலையில் பார்க்க விரும்பவில்லை. அடுத்து வரும் நாட்கள் அவருக்கு கடினமாக இருக்கும்.

சுமித் இப்பிரச்சினையில் இருந்து வெளியே வர வேண்டும். வலிமையானவராக இருக்க வேண்டும். வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது மிகப்பெரிய தண்டனையாகும். இது அதிகபடியானது என கருதுகிறேன்.

ஸ்டீவன் சுமித் நல்ல மனிதர். ஆனால் அவர் தவறான இடத்தில் நின்று விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com