தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- தமிழக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- தமிழக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்டமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் யாருடைய உத்தரவு பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com