பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி

பள்ளி கட்டிடங்களின் சீரமைப்பு, சமுதாயக்கூடம் கட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக பள்ளிகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி வழங்கியது.
பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொண்டுவரும் ஸ்டெர் லைட்காப்பர் சிறந்த கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கூடங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், பள்ளி கட்டிடங்களின் சீரமைப்பு, சமுதாயக்கூடம் கட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கியது.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் புராஜெக்ட்ஸ் தலைவர் முருகேசுவரன், சி.எஸ்.ஆர். தலைவர் கைலாசம் மற்றும் பி.ஆர் தலைவர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் நிதி உதவியை வழங்கினர்.

இதில் பேசிய முருகேசுவரன், சமுதாயத்தின் நியாயமான தேவைகளுக்கு ஸ்டெர்லைட் காப்பர் எப்போதும் ஆதரவளிப்பதுடன், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆதரவளித்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். சனிக் கிழமை தோறும் வளாகமானது பொதுமக்களின் வருகைக்காக திறந்திருக்கும். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தாளமுத்து நகரில் உள்ள காரப்பேட்டை மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆர். சி. நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆர்.ஓ. சிஸ்டம் அமைப்பதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது. செம்பாத்தியாபுரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி, மேல தட்டாப் பாறை டி.என்.டி.டி.ஏ. ஆரம்பப் பள்ளி, வி.எஸ்.பட்டி ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிக் கட்டிடங்களைச் சீரமைப்பதற் காகவும், தாங்கல்புரம் கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்காகவும், வாரண்டியா வேல் மற்றும் ஏ. கோபாலபுரம் இந்து நடுநிலைப் பள்ளியின் போக்குவரத்து வசதிக்காகவும் நிதியுதவி வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com