பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி... தொண்டர்கள் உற்சாக முழக்கம்

நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி... தொண்டர்கள் உற்சாக முழக்கம்
Published on

நெல்லை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அங்கிருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.

மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு தொண்டர்கள் அவரை வரவேற்றனர். நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com