மாநில மாநாடு பொதுக்கூட்டம்: சீமான் நாளை குமரி வருகை

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில மாநாடு கன்னியாகுமரி நாளை நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மாநில மாநாடு பொதுக்கூட்டம்: சீமான் நாளை குமரி வருகை
Published on

நாகர்கோவில்:

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில மாநாடு கன்னியாகுமரி கோவளத்தில் நாளை (4-ந் தேதி) மாலை நடக்கிறது. மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மண்டல செயலாளர் ஜோசப் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2009-ம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும், தமிழ் இன படுகொலையை கண்டித்தும் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் தன்னையே கொடிய தீய்க்கு இரையாக்கி தமிழ் இன போராட்டத்தில் பேரெழுச்சியை உருவாக்கிய மாவீரன் முத்துக்குமாரின் 9-வது நினைவு தின பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாளை காலை 11 மணிக்கு குமரி மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், வார்டு, கிளை செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com