சுய தொழில் தொடங்க ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கடன் உதவி

சுய வேலை திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இறந்தால் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆஷா என்ற திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய கடனுதவி  வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட மக்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 

இந்த திட்டத்தில் சுய வேலை திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20சதவீதம் அல்லது ரூ.1லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 

ஆண்டுக்கு 6.5சதவீதம் வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்குள் திரும்பச்செலுத்தலாம். 

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனாவால் உயிர் இழந்ததற்கான ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 0421&2971112, 94450 29552 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com