கோவை நகரில் நாளை முதன்முதலாக ஜல்லிக்கட்டு: 750 காளைகள் - 500 வீரர்கள் பங்கேற்பு

கோவை நகரில் நாளை முதன்முதலாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் 750 காளைகளுடன் சுமார் 500 வீரர்கள் மோதுகின்றனர்.
கோவை நகரில் நாளை முதன்முதலாக ஜல்லிக்கட்டு: 750 காளைகள் - 500 வீரர்கள் பங்கேற்பு
Published on

கோவை:

கோவை நகரில் நாளை முதன்முதலாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் 750 காளைகளுடன் சுமார் 500 வீரர்கள் மோதுகின்றனர்.

இந்த ஆண்டின் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை, சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் நடந்தேறின. இந்நிலையில், கோவை நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதன்முதலாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் 750 காளைகளுடன் சுமார் 500 வீரர்கள் மோதுகின்றனர்.

ஓம்கர் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் சுமார் 25 ஏக்கர் கொண்ட திடலில் நடைபெறும் இந்த போட்டிக்கான பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com