

ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையபட்டி துணைமின் நிலையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் துணை மின் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலையபட்டி துணை மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகி ஜெயசிங் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட சங்க தலைவர் ராமசாமி ஜெயபால், மின் ஊழியர்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.