ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 2 சிறுவர்கள் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு சீர்திருத்தப் பள்ளியில் இருந்த 2 சிறுவர்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 2 சிறுவர்கள் மாயம்
Published on

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லிப்புதூரில் அரசு குழந்தைகள் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு வத்தலக்குண்டு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (13), அருப்புக்கோட்டை சத்தியவாணிமுத்து நகர் கதிரேசன் மகன் விஷ்ணு (14) ஆகியோர் இருந்து வந்தனர்.

கடந்த ஜூலை 31-ந்தேதி 2 பேரும் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் வீட்டுக்கும் செல்லவில்லை.

இதுகுறித்து சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஜெயசங்கர், மல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சீர்திருத்தப்பள்ளி சிறுவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com