கோடியக்கரை அருகே மீனவர்களின் ஆடைகளை களைந்து இலங்கை கடற்படை தாக்குதல்

பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் ஆடைகளை களைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோடியக்கரை அருகே மீனவர்களின் ஆடைகளை களைந்து இலங்கை கடற்படை தாக்குதல்
Published on

நாகை:

ராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த 3 மீனவர்களின் ஆடைகளை களைந்து இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், ஒரு மீனவரின் வாயில் புகையிலையை திணித்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். படகில் இருந்த உணவுப்பொருட்களையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்று விட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com