சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Srilankablast
சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு
Published on

சென்னை:

சென்னையில் நேற்று மாலையில் இருந்தே சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர்லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த இரண்டு இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எழும்பூரில் உள்ள புத்தமட அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Srilankablast

X

Maalai Malar
www.maalaimalar.com