எச்.ராஜா-சேகரை ஒதுக்கிவிட்டு காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்- ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி

பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோரை ஒதுக்கி வைத்துவிட்டு காவிரி நீர் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.
எச்.ராஜா-சேகரை ஒதுக்கிவிட்டு காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்- ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி
Published on

சீர்காழி:

சீர்காழி அடுத்த தைக்கால் கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளிலிருந்து 1லட்சம் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே மணல் அள்ளவேண்டும். மீதமுள்ள மாதங்களில் மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும். கர்நாடக மாநிலத்திலிருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் பிரச்சினை போல் நமக்கு அடுத்த பிரச்சினையாக இருப்பது மணல் கொள்ளை. நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவேண்டும். மே மாதத்திற்கு 40டிஎம்சி தண்ணீரையும், ஜூன் மாதத்திற்கு 45டிஎம்சி தண்ணீரையும் வழங்கவேண்டும். இதற்கு மணல்குவாரி தடையாக இருந்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகட்டவேண்டும். வருடந்தோறும் 2 அல்லது 3லட்சம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் முக்கொம்பு என்ற இடத்தில் இணைப்பதன் மூலம் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் பஞ்சம் வராது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் வலுப்பெற்று வரும் நிலையில், நிர்மலாதேவி பிரச்னையை வைத்து காவிரி பிரச்சினையை மூடி மறைக்கும் முயற்சி நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோரை ஒதுக்கி வைத்துவிட்டு காவிரி நீர் பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com