

துபாய்:
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படவில்லை என துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்ட ரீதியிலான சிக்கல்கள் இன்னும் தீராததால் எம்பால்மிங் செய்வதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை மதியத்திற்கு பிறகே அவரது உடல் மும்பை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுறது. #Sridevi