இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும்: சங்கக்கரா

இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட விரும்புவதாக முன்னாள் கேப்டன் சங்கக்கரா பேட்டியளித்துள்ளார்.
இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும்: சங்கக்கரா
Published on

நம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக இலங்கை அணி விளையாட வேண்டும். அதனை இலங்கை அணி செய்தால் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இருக்கும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல. 

உடல் தகுதி பெற்று மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் ஆடினால் அது இலங்கை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.  அதேநேரத்தில் இலங்கை அணி தனது ரன்ரேட் விகிதத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதால் உபுல் தரங்கா தடைக்கு ஆளாகி இருப்பது பெரிய இழப்பாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com