இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே வரும் 29-ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளார் என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த ஜெய்சங்கர்
கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி:

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இந்தியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது, பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, வரும் 29-ம் தேதி இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளார் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com