டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு
Published on

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 4 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். பெங்களூரில் வந்திறங்கிய அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்திப்பதாக கூறப்பட்டது.


இந்நிலையில், இன்று டெல்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் கைக்குலுக்கி கொண்டனர்.   
 
இலங்கையை சற்றியுள்ள கடற்பரப்பில் கடற்படையை வலிமைப்படுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.


அதன்பின்னர் 5-வது சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் ரணில் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார். தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை புறப்படுகிறார்.

கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற புத்தமத திருவிழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com