இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே
Published on

கொழும்பு:

இலங்கை பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர் 11-ம் தேதி இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்.

அவரது பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார். மேலும், இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

இந்த சுற்றுப்பயணத்தில் வாரணாசி, சாரநாத், புத்த கயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை பிரதமராக பதவியேற்றபின், மகிந்த ராஜபக்சே இந்தியா செல்ல இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com