நாக்பூரில் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு

நாக்பூரில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது.
நாக்பூரில் 2-வது டெஸ்ட் தொடங்கியது: இலங்கை அணி பேட்டிங் தேர்வு
Published on

நாக்பூர்:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி போராடி தோல்வியில் இருந்து தப்பி ‘டிரா’ செய்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முரளி விஜய், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்குப் பதில் இஷாந்த் சர்மாவும்,  புவனேஸ்வர் குமாருக்குப் பதில் ரோகித் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவானுக்குப் பதில் முரளி விஜய் துவக்க வீரராகக் களமிறங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையைப் பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

இந்திய அணி: முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரகானே, ரோகித் சர்மா, சகா(விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா.

இலங்கை அணி: சமரவிக்ரமா, குணரத்னே, திரிமன்னே, மேத்யூஸ், சண்டிமல் (கேப்டன்), டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனகா, பெரேரா, ஹெராத், லக்மல், லகிரு காமேஜ்.

கருணாரத்னே, சமரவிக்ரமே துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஆடுகளம்போன்று தெரிகிறது. எனவே, அதிக ரன்களை குவிக்க முயற்சி செய்வோம் என சண்டிமல் கூறினார். ஆடுகளத்தில் புற்கள் அதிகம் இன்றி, சில இடங்களில் வெடிப்பு காணப்படுவதால் முதல் செசனில் விக்கெட் வீழ்த்த முடியும் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com