இலங்கை அதிபரின் மனநிலையை பரிசோதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு

இலங்கை அதிபரின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். #Sirisena
இலங்கை அதிபரின் மனநிலையை பரிசோதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு
Published on

கொழும்பு:

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.

இவருக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

அதன் காரணமாக இலங்கையில் 2 மாதங்களாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவியது.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரது மனநிலையை பரிசோதித்து உடல்நிலையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தக்ஷிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #Sirisena

X

Maalai Malar
www.maalaimalar.com