டெஸ்ட் வரலாற்றில் 100-வது தோல்வியை மிகவும் மோசமான தோல்வியாக பதிவு செய்த இலங்கை

நாக்பூர் டெஸ்டில் தோல்வியடைந்தது இலங்கை அணியின் 100-வது தோல்வியாகும். இந்த தோல்வியை மிகவும் அதிக அளவினான வித்தியாசத்தில் பதிவு செய்துள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் 100-வது தோல்வியை மிகவும் மோசமான தோல்வியாக பதிவு செய்த இலங்கை
Published on

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் (128), புஜாரா (143), விராட் கோலி (213), ரோகித் சர்மா (102) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்து இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (2), ஜடேஜா (2), உமேஷ் யாதவ் (2) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை 166 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டியில் 100-வது தோல்வியாகும். 100-வது தோல்வியை மிகவும் மோசமான வகையில் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்களில் தோல்வியடைந்ததே மோசமான தோல்வியாக இருந்தது.

தற்போது நாக்பூரில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மோசமான தோல்வியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com