டெல்லியில் காற்று மாசுபாடு: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை புகார்

டெல்லி டெஸ்டில் காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிகெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
Published on

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெற்றி - தோல்வியில்லாமல் ‘டிரா’வில் முடிந்தது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 9 டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தன. அவற்றோடு இந்தியா இணைந்தது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. 2-வது நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர்கள் 4 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறி வாந்தி எடுத்தனர்.

மேலும் அவர்கள் முகமூடி அணிந்து பீல்டிங் செய்தனர். இதனால் இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து இருந்தனர்.

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 ஆண்டுக்கு 2 டெஸ்ட் போட்டியை நடத்துவது இல்லை என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது.

இந்த நிலையில் டெல்லி டெஸ்டில் காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இலங்கை கிரிகெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஜெயசேகரா இதை தெரிவித்தார். அவர் இதுபற்றி கூறும்போது, டெல்லியில் காற்று மாசுபாடு இருந்த போது விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காற்று மாசுபாடால் 4 வீரர்களுக்கு வாந்தி ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com