காஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்
அமெரிக்கா அதிபர் டிரம்ப்
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இதில், ‘எனது நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை குறித்தும், முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை குறைக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன்.

சூழலோ கடுமையானதுதான். ஆனால், நல்ல முறையில் உரையாடல் நிகழ்ந்து முடிந்தது’ என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களுக்காகவும், நம் துணை கண்டத்தில் வசிக்கும் நண்பர்களாக திகழும் மக்களுக்காகவும் இரு நாட்டு பிரதமர்களிடமும் பேசினார்.

பிரதமர் மோடி, காஷ்மீரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது அழைப்பிற்கான நேரம்’ என கூறியுள்ளார்.

இதற்கிடையே, தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com