வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் ஆச்சியூர் அருகே சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
சாலை மறியல்
Published on

தாராபுரம்:

தாராபுரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஆனந்தன் என்பவர் மனைவி பிருந்தா (வயது 32), இவர்களது மகள் சரண்யா (10) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆச்சியூரைச் சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் ஆச்சியூர் அருகே சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com