கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் கடந்த 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பகவத் அனுக்ஞை, ஆசார்யவர்ணம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, பவித்ர பிரதிஷ்டை, வேத திவ்ய பிரபந்தபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பெருமாள்-தாயார் மண்டபம் எழுந்தருளுதல், அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், பெருமாளுக்கு பவித்ர மாலை சமர்ப்பித்தல், பூர்ணாஹூதி சாற்றுமுறையும் மாலை 6 மணிக்கு யாகசாலை பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறையும் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) வரை திருபவித்ரோத்ஸவம் மற்றும் யாக சாலை ஹோமம் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com