முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது.
கலெக்டர் சாந்தா
கலெக்டர் சாந்தா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கலெக்டர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது. 

கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரிபவர்களை சார்ந்தோர் தங்களது கோரிக்கை மனுவினை, அடையாள அட்டையுடன் நேரில் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com