

சென்னை:
புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் ‘‘திருப்புகழ் திருப்படி’’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் தெற்கு ரெயில்வே 2 சிறப்பு மின்சார ரெயில்களை இயக்குகிறது.
அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை (31-ந்தேதி) இந்த சிறப்பு மின்சார ரெயில் விடப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு 10.20-க்கு செல்கிறது. அதே போல இரவு 10.30 மணிக்கு திருத்தணியில் புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 10.50 மணிக்கு வந்தடைகிறது.
மற்றொரு சிறப்பு ரெயில் அரக்கோணத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு இரவு 11.45 மணிக்கு செல்கிறது. திருத்தணியில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அரக் கோணத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு வந்தடைகிறது.