அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுவித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைகோ
வைகோ
Published on

சென்னை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மதிமுகவை உடைக்க திமுக தலைவர் கருணாநிதி (அப்போதைய முதல்வர்) முயற்சி செய்ததாக கூறியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் திமுக சார்பில் வைகோ மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com